தமிழ்நாடு

ரேஷனில் இனி உளுத்தம் பருப்பு இல்லை

ரேஷனில் இனி உளுத்தம் பருப்பு இல்லை

webteam

உளுத்தம்பருப்பின் வரத்து குறைவாக உள்ளதால் ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் துவரம் பருப்பு ஒரு கிலோ வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 13 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பும், 7 ஆயிரம் மெட்ரிக் டன் உளுந்தம்பருப்பும் கடந்த காலங்களில் கொள்முதல் செய்யப்பட்டு, நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் தற்போது உளுந்தம் பருப்பின் வரத்து குறைவாக உள்ளதால், இனி ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு அல்லது மசூர் பருப்புகளில் ஏதாவது ஒன்று வழங்கப்படும் என்றார். ஒரு ரேஷன் அட்டைக்கு 1 கிலோ வீதம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

ஏற்கனவே ரேஷன் சர்க்கரையின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், உளுத்தம்பருப்பும் இனி கிடைக்காது என்பது ரேஷனை நம்பியுள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் உளுத்தம் பருப்பு விலை வெளிக்கடைகளில் வாங்கும் போது அது ரேஷன் கடை விலையை விட உயர்வாக இருக்கும் என்பதால்  மக்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.