தமிழ்நாடு

அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த கல்லூரிக்கு சுகாதாரத்துறை சீல்

அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த கல்லூரிக்கு சுகாதாரத்துறை சீல்

webteam

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியை நெல்லை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குனர் இளங்கோவன் ஆய்வுசெய்த போது போலியானவை என்று தெரியவந்தது. இதையடுத்த கல்லூரிக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்று பல்வேறு இடங்களில் பாராமெடிக்கல் கல்லூரி என்ற பெயரில் நடத்தபெற்று வருவதாக புகார் வந்ததை அடுத்து உயர்நீதிமன்றம் போலி கல்லூரியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நேற்று  சுகாதாரதுறைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் நெல்லை மண்டல சுகாதார துறை இணை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் வருவாய்துறையினர் மற்றும் காவல்துறை உதவியுடன் ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கிவரும் பாரா மெடிக்கல் கல்லூரியை ஆய்வு செய்தனர். இதில் வடக்கு ரதவீதியில் இயங்கி வரும் அன்னை தெரசா பாரா மெடிக்கல் கல்லூரியில் ஆய்வு நடத்தியதில், அது  போலியாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கபட்டது. 

கல்லூரியில் எடுக்கப்பட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த சுகாதார துறையினர், போலியாக செயல்பட்டு வந்த கல்லூரிகளை வருவாய்த்துறையினர் உதவியுடன் பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது போலியாக இயங்கிய பாரா மெடிக்கல் கல்லூரிகள் குறித்த அறிக்கை உயர்அதிகாரிகளிடம் சமர்பிக்கப்படும். மேலும் மாவட்டத்தில் உள்ள அணைத்து பாரா மெடிக்கல் கல்லூரிகளையும் ஆய்வு செய்து நடவைக்கை எடுக்கப்படும் என்றார்.