தமிழ்நாடு

தமிழகத்தில் கோவிட் கட்டளை மையத்தை நேரில் ஆய்வு செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

தமிழகத்தில் கோவிட் கட்டளை மையத்தை நேரில் ஆய்வு செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

நிவேதா ஜெகராஜா

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்ட உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தமிழகம் வந்துள்ளார். தமிழகத்தில் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் செயல்பட்டு வரும் அவசர 108 கட்டுப்பாட்டு அறை, கோவிட் கட்டளை மையம் (WAR ROOM ) மற்றும் ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இயக்குனர் தேரணி ராஜன் மற்றும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து சேப்பாக்கத்தில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆய்வு மேற்கொண்டார் அதன் தொடர்ச்சியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையினையில் உள்ள அம்மா முழு உடல் பரிசோதனை மையம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார் அவர்.

இன்று மாலை தமிழக திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி, புதுச்சேரியில் இன்றும், நாளையும் நடக்கவுள்ள தேசிய இளைஞர் விழாவை இன்று காலை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதேபோல புதுவை கருவடிக்குப்பத்தில் 23 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தையும், புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் 122 கோடி ரூபாயில் தொடங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். புதுவை அண்ணா சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் காணொலி காட்சி மூலம் நடத்த விழாவில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.