தமிழ்நாடு

கொரோனாவால் முடங்கிய படிப்பு: கல்வியோடு தற்காப்புக் கலையை கற்றுத்தரும் பட்டதாரி பெண்

கொரோனாவால் முடங்கிய படிப்பு: கல்வியோடு தற்காப்புக் கலையை கற்றுத்தரும் பட்டதாரி பெண்

kaleelrahman

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஊரடங்கினால் கல்வி பயில முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு கல்வியுடன், தற்காப்புக் கலையையும், பட்டதாரி இளம்பெண் கற்றுக் கொடுக்கிறார்.

வடுகப்பட்டியைச் சேர்ந்த நிவேதா என்ற பட்டதாரி பெண், தனது பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருகிறார். ஊரடங்கு காரணமாக, செங்கல் சூளைகளுக்கும், விவசாயத் தோட்டத்திற்கும் வேலைக்கு சென்ற மாணவர்களை அழைத்து, கல்வி பயில்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் குறைந்த மாணவர்களே இவரிடம் பயின்று வந்த நிலையில், நிவேதாவின் திறமையை அறிந்து தற்போது, ஏராளமான மாணவர்கள் இவரிடம் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்கள் தனித் திறமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, கல்வியுடன் தற்காப்புக் கலைகளையும் கற்றுத்தருகிறார். இதற்காக ஊராட்சி மன்றத் தலைவர் ஊராட்சிக் கட்டடத்தை வழங்கியுள்ளார்.