தமிழ்நாடு

நீட் பயிற்சி மையங்களில் சோதனை.. கணக்கில் வராத ரொக்கம் ரூ.150 கோடி கண்டுபிடிப்பு

Rasus

நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள கல்வி நிறுவனம், மற்றும் நீட் பயிற்சி மையங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி மையங்கள், கல்வி நிறுவனங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். வரி ஏய்ப்பு புகாரில் நாமக்கல், பெருந்துறை, கரூர், சென்னை உள்ளிட்ட பகுதியில் உள்ள சுமார் 17 இடங்களில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் ரூ.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் கணக்கில் வராத ரொக்கமாக ரூ.150 கோடி பணம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் பணத்தையும், அசையா சொத்துகளிள் ஆவணங்களையும் பதுக்கி வைத்திருந்தததாக வருமான வரித்துறையினர் கூறியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் தனியார் நீட் பயிற்சி மையங்களில் அதிக ஊதியத்திற்கு ஆசிரியர்களை நியமித்ததும் தெரிவந்துள்ளது. வருமான வரித்துறையினரின் சோதனை இரண்டாவது நாளாக தொடர்ந்து இன்றும் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜி.பரமேஸ்வராவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்த சோதனையில் கணக்கில் வராத ரொக்கமாக ரூ100 கோடி இருப்பது கண்டறியப்பபட்டது. இந்தப் பணம் சுமார் 185 பேரிடம் இருந்து ஒரு மருத்துவ சீட்டிற்கு தலா ரூ50 லட்சம் முதல் 60 லட்சம் வரை பெற்றுக் கொண்டதாகும்.