தமிழ்நாடு

தெலுங்கில் பேசிய மூதாட்டி - குழந்தை கடத்த வந்ததாக தாக்குதல்

தெலுங்கில் பேசிய மூதாட்டி - குழந்தை கடத்த வந்ததாக தாக்குதல்

webteam

தெலுங்கில் பேசிய மூதாட்டி - குழந்தை கடத்த வந்ததாக தாக்குதல்விருத்தாச்சலம் அருகே பெண்ணாடத்தில் குழந்தை திருட வந்ததாகக் கூறி தமிழ் தெரியாத மூதாட்டியை தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கவலைக்கிடமான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குழந்தை கடத்த வந்ததாகக்கூறி வாட்ஸ் அப்பில் பரவும் தகவல்கள் மற்றும் வதந்திகளால் அண்மை காலங்களில் பல தாக்குதல்கள் ஆங்காங்கே நடந்தேறி வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழ்ப் பேச தெரியாதவர்கள் மற்றும் வடமாநிலத்தவர்கள் மீது சந்தேகப்படும்படி இருந்தால் உடனே அடித்து உதைப்பது வாடிக்கையாகியுள்ளது. இது பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என காவல்துறையினர் கூறி வந்தாலும், குழந்தை திருட வந்ததாகக்கூறி சிலர் தாக்கப்படும் சம்பவம் தொடர் கதையாகியே வருகிறது. 

சேலம் மாவட்டதில் வடநாட்டு வாலிபர் ஒருவர் வீடுகளுக்குள் புகுந்து தண்ணீர் கேட்டபோது, சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் விசாரித்தபோது அவர் ஹிந்தியில் பேசியதால் அவர் குழந்தையை கடத்தவந்ததாக நினைத்து மின்கம்பத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கினர். தற்போது மீண்டும் அதேபோன்று சம்பவம் ஒன்று கடலூரில் அரங்கேறியுள்ளது. 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கிழக்கு வாள்பட்டறை பஸ் நிறுத்தம் அருகே ஆந்திராவை சேர்ந்த மூதாட்டி லட்சுமி என்பவர் பழைய சேலை வியபாரம் செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மதியம் 11 மணியளவில் அப்பகுதியிலிருந்த சிலர் இந்த மூதாட்டியிடம் ஊர் பெயரை விசாரித்தனர். தமிழ் தெரியாத பாட்டி தெலுங்கில் பதில் செல்ல அதனை புரிந்து கொள்ளாமல் குழந்தையை கடந்த வந்ததாக கூறி பாட்டியை தாக்கியுள்ளனர். இதில் பாட்டி படுகாயம் அடைந்துள்ளார். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் சிலர் பாட்டியை மீட்டு திட்டக்குடி மருத்துவமனையில் சேர்த்தார். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

கடுமையாக தாக்கப்பட்ட அந்த பாட்டிக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியதால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கடந்த வாரம் வாட்ஸ்அப்பில் வந்த குறுந்தகவலை வைத்து குழந்தை கடந்துவதால் வந்த வதந்தியால் திட்டக்குடி அடுத்த சிருமுளை உயர்நிலை பள்ளியிலிருந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தையை அழைத்து சென்றனர். இதுபோல் தெடர்ச்சியாக வந்திகள் பரவுவதால் பெற்றோர்களும், தமிழ்தெரியாதவர்களும் அச்சத்தில் உள்ளனர். வந்திகளை பரப்புவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் மூதாட்டியை தாங்கியவர்கள் யார் என அருகில் உள்ள கடைகளில் சிசிடி கேமராவில் உள்ள காட்சியை வைத்து மாவட்ட காவல்துறை கண்ணானிப்பாளர் விஜயக்குமார் நேரில் விசாரணை செய்து வருகின்றார். இதுவரை மூதாட்டியை தாக்கியதாக யாரும் கைது செய்யப்படவில்லை