தமிழ்நாடு

தேசிய வங்கிகளிலும் வேளாண் கடன்களை ரத்து செய்க - உழவர் உழைப்பாளர் கட்சி கோரிக்கை

தேசிய வங்கிகளிலும் வேளாண் கடன்களை ரத்து செய்க - உழவர் உழைப்பாளர் கட்சி கோரிக்கை

JustinDurai

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில், உழவர் தலைவர் நாராயணசாமியின் பிறந்தநாள் கூட்டம், திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர்கு.செல்லமுத்து செய்தியாளர்களிடம் கூறும்போது, "விவசாயிகள் பயனடையும் வகையில், ரூ.12510 கோடி கடனை தமிழக முதல்வர் தள்ளுபடி செய்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் செய்தி. அதேசமயம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்து உத்தரவிடுவதோடு, அவர்கள் மீண்டும் தொழில் செய்யும் வகையில் ரூ.ஒரு லட்சம் வட்டியில்லாத கடன் வழங்க உத்தரவிட வேண்டும்.

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்துக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசு ஒட்டு மொத்த விவசாயிகளை கேவலப்படுத்தி வருகிறது. தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் உள்ளோம்" என்றார்.