சங்கர் ஆணவக்கொலை வழக்கில் தீர்ப்பை விமர்சிக்கும் வகையில் பேசியதாக 2 பேருக்கு அடி உதை விழுந்தது.
உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் தீர்ப்பை அறிவதற்காக, திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மாதர் சங்கத்தினர், இளைஞர் அமைப்பினர் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டோரின் உறவினர்கள் கூடியிருந்தனர். அப்போது, குற்றவாளிகள் 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதனை விமர்சிக்கும் வகையிலும், கொலையை நியாயப்படுத்தியும் இரண்டு பேர் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் இரண்டு பேரையும் தாக்கினர். அவர்களை தடுத்த காவல்துறையினர், 2 பேரையும் அழைத்துச்சென்றனர். அதேநேரத்தில் குற்றவாளிகளின் ஆதரவாளர்கள் சிலர், மாதர் சங்கத்தினர் மற்றும் இளைஞர் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். அவர்களையும் காவல்துறையினர் விரட்டியடித்தனர்.