யானை கோப்புப்படம்
தமிழ்நாடு

உடுமலை: காயங்களுடன் இறந்து கிடந்த காட்டு யானை – வனத்துறையினர் விசாரணை

உடுமலை அருகே மார்பில் உள் காயங்களுடன் இறந்து கிடந்த ஆண் யானை. வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழக கேரள எல்லையில் சுமார் 300க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஈசல்திட்டு செட்டி மொடக்கு சரகம் பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

காயங்களுடன் இறந்து கிடந்த காட்டு யானை

இதைத் தொடர்ந்து உதவி வனப் பாதுகாவலர் கே.கீதா, உடுமலை வனச்சரகர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையில் மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில், உயிரிழந்து கிடந்தது 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பது தெரியவந்தது. மேலும் யானை தன் மார்பு பகுதியில் ஏற்பட்ட உள் காயங்களால் இறந்திருப்பது பிரேத பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.