தமிழ்நாடு

டூ வீலர்களின் விலை 7ஆயிரம் வரை அதிகரிப்பு?

Rasus

இரு சக்கர வாகனங்களின் விலை 7,000 ரூபாய் வரை அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.

கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் இரு சக்கர வாகனங்களின் விலை 4,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் புகை உமிழ்வு தொடர்பாக வாகனங்களில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால் அவற்றின் விலை உயரும் என கோட்டக் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

காப்பீடு உள்ளிட்ட செலவினங்களால் இரு சக்கர வாகனங்களின் விலை கடந்த 2 மாதங்களில் 7 முதல் 16 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக கோட்டக் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் BS - 6 விதிமுறைகள் அமலாக உள்ளதால் ABS/CBS உள்ளிட்ட வசதிகள் இரு சக்கர வாகனங்களில் கட்டாயமாக்கப்பட உள்ளது.