சுப்பா ராவ் - தியாகராஜன்  PT WEB
தமிழ்நாடு

கோவை : வெள்ளியங்கிரி மலை ஏறும் போது 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

வெள்ளியங்கிரி மலை ஏறும் போது, ஒரே நாளில் 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

webteam

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மேற்குத் தொடர்ச்சி மலையில் சுயம்பு வடிவில் இருக்கக்கூடிய சிவலிங்கத்தைத் தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் அதிகளவில் செல்வது வழக்கம்.

அப்படி ஹைதராபாத்தைச் சேர்ந்த, சுப்பா ராவ் (68) என்பவரும் சென்றுள்ளார். ஆனால் எதிர்பாரா விதமாக நான்காவது மலையில் ஏறும் போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் (35) என்பவர், 1வது மலை ஏறிய போது உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார்.

சுப்பா ராவ் - தியாகராஜன்

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற வனத்துறையினர் சுமை தூக்கும் தொழிலாளர்களை வைத்து அவர்களின் உடல்களை மலையடிவாரத்திற்குக் கொண்டு வந்தனர். பின்னர் இருவரின் உடல்களும், பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, உயிரிழந்த இருவரின் உறவினர்களுக்கும், ஆலந்துறை போலீசார் தகவல் அளித்து விட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளியங்கிரி மலைக்கு, உடல் நல பிரச்னைகள் இருப்பவர்கள் மருத்துவ முன்னேற்பாடுகள் மற்றும் மருத்துவ அறிவுரை இன்றி ஏறவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.