தமிழ்நாடு

இரட்டை இலை சின்னம்: உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு

இரட்டை இலை சின்னம்: உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு

webteam

இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கிய டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் இன்று மேல்முறையீடு செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக,  ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் டிடிவி.தினகரன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தனித்தனியாக செயல்பட்டது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும்  ஒரு அணியில் இணைந்தனர். இவர்களின் அணிக்கே பெரும்பான்மை உள்ளதாகக் கூறி, அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றைத் தலைமை தேர்தல் ஆணையம், 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுக்கே ஒதுக்கீடு செய்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக டிடிவி .தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜிஎஸ்.சிஸ்தானி மற்றும் சங்கீதா டிங்கிரி சேகல் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சி ஆகியவற்றை இபிஎஸ், ஓபிஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்த து.

இந்த தீர்ப்பு குறித்து டிடிவி.தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜசெந்தூர் பாண்டியன், ‘’ உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக சட்ட வல் லுனர்களுடன் ஆலோசனை நடத்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்’’ என்று கூறியிருந்தார். அதன்படி உச்சநீதிமன்றத்தில் டிடி வி தினகரன் இன்று மேல்முறையீடு செய்துள்ளார்.