தமிழ்நாடு

கடலில் மிதந்து வந்த பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த 2 மீனவர்கள் உயிரிழப்பு

கடலில் மிதந்து வந்த பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த 2 மீனவர்கள் உயிரிழப்பு

kaleelrahman

வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் நடுக்கடலில் மீன்பிடிக்கும் போது மிதந்து வந்த பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த தங்கட்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் அந்தோணி உயிரிழந்த நிலையில் மேலும் போஸ் என்ற மீனவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் ராமேஸ்வரம் பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர் இந்தநிலையில் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு கோடியக்கரையிலிருந்து பாம்பனைச் சேர்ந்த ஜான், தோமஸ், செல்வேந்திரன், அந்தோணி, வினோத், போஸ் ஆகிய ஆறு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.


இவர்கள் சுமார் 15 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருக்கும்போது இன்று அதிகாலை 4 மணியளவில் கடலில் மிதந்து வந்த 3 லிட்டர் பாட்டில் வலையில் சிக்கியது. அந்த பாட்டிலை எடுத்து அதிலிருந்த திரவத்தை அந்தோணி, போஸ், வினோத் ஆகிய மூன்று பேரும் குடித்துள்ளனர் இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த புல்லட் என்கிற அந்தோணி படகிலேயே உயிரிழந்தார்.


மீனவர் போஸ் ஆபத்தான நிலையில் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீனவர் வினோத் என்பவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்;சை பெற்று வருகின்றனர் இச்சம்பவம் குறித்து கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.