Accused pt desk
தமிழ்நாடு

ராமநாதபுரம்: வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகைகளை திருடியதாக இருவர் கைது

ராமநாதபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகளை திருடியதாக இருவரை கைது செய்த போலீசார், நகைகளை மீட்டனர்.

webteam

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் கொத்த தெரு பகுதியை சேர்ந்தவர்கள் மதியழகன் - மணிமாலா தம்பதியர். இவர்கள் இருவரும், கடந்த 6ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருப்பூரில் உள்ள அவர்களது மகன் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்து 8ஆம் தேதி மதியழகனுக்கு போன் செய்த அவரது மருமகன் மணிமொழி, வீட்டின் முன்வாசல் கதவு உடைக்கப்பட்டு பீரோக்கள் உடைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவித்துளளார்.

Police station

தகவல் அறிந்து வீட்டிற்கு வந்த மதியழகன், வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் தங்க நகைகள் மற்றும் 1.35 லட்சம் பணத்தை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மதியழகன் பஜார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்த மகேந்திரன், தேனி மாவட்டம் உத்தம்பாளையத்தை சேர்ந்த மோகன் ஆகிய இருவரையும் ராமநாதபுரம் மாவட்ட சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 45 பவுன் நகைகளை மீட்டுள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.