தமிழ்நாடு

கொடைக்கானலில் இருமடங்காக உயர்ந்த படகு சவாரி கட்டணம்: உள்ளூர் மக்கள் எதிர்ப்பு

கொடைக்கானலில் இருமடங்காக உயர்ந்த படகு சவாரி கட்டணம்: உள்ளூர் மக்கள் எதிர்ப்பு

kaleelrahman

கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் சாமானியர்களும் படகு சவாரி செய்து வந்த நிலையில், பணம் படைத்தவர்களுக்கு தனி கட்டணம், சாமானியர்களுக்கு தனி கட்டணம் என வகை பிரித்தும், வார நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு கட்டணமாகவும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தனிகட்டணம் என உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சிறப்பு கட்டணமாக பணம் படைத்தவர்கள் மூன்று மடங்கு அதிக கட்டணம் செலுத்தினால் வரிசையில் நிற்காமல் நேரடியாக படகில் ஏற்றவும் கட்டணம் வரையறை செய்யப்பட்டுள்ளது.

100 ரூபாயாக இருந்த படகுசவாரி கட்டணம் தற்போது 200 ரூபாயாகவும் சாமனியர்களுக்கும், பணம் படைத்தவர்களுக்கும் 250 ரூபாயாக அடிப்படை படகு சவாரி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பணக்காரர் ஏழை என பாகுபாடு பார்த்து கட்டணம் வசூல் செய்வதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.