தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்  ட்விட்டர்
தமிழ்நாடு

ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பேசிய விஜய்...!

நீட் தேர்வால் ஏழை-எளிய மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நீட் விலக்கு ஒன்றே தீர்வு எனவும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

PT WEB

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஊக்கத் தொகை இன்று வழங்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்

கடந்த 28 ஆம் தேதி 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு இன்று பரிசுகளை வழங்கி வருகிறார்.

முதல்கட்ட நிகழ்ச்சியின்போது தமிழகத்தில் நல்ல தலைவர்கள் வேண்டும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது போன்ற விஷயங்கள் குறித்து பேசி, விவாதத்தை ஏற்படுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்

இந்நிலையில் இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார். அதன்படி, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனவும், இடைக்காலமாக சிறப்பு பொதுப் பட்டியலை உருவாக்கி, அதில், கல்வி, சுகாதாரத்தை சேர்க்க வேண்டும் என விஜய் வலியுறுத்தினார். நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு ஆதரவாக பேசிய அவர், மத்திய அரசு குறித்து பேசும்போது ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பேசியது கவனிக்கத்தக்கது.