தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அனைத்து வழக்குகளும் சிபிஐ-க்கு மாற்றம்..!

Rasus

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்த மே மோதம் 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

இதனிடையே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.