தமிழ்நாடு

ஆமைகளை கறிக்காக வெட்டி கொல்ல முயற்சி - காப்பாற்றிய காவல்துறை

ஆமைகளை கறிக்காக வெட்டி கொல்ல முயற்சி - காப்பாற்றிய காவல்துறை

webteam

தூத்துக்குடியில் ஆமைகளை கறிக்காக வெட்டி கொல்ல முயற்சி செய்தபோது, காவல்துறையினர் அவற்றை மீட்டனர். 

தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியில் சட்ட விரோதமாக கறிக்காக ஆமைகளை வெட்டி விற்பனை செய்துவந்துள்ளனர். இதுதொடர்பாக தென்பாகம் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், காவல்துறையினர் அங்கு சோதனை நடத்த சென்றனர். அப்போது அங்கு சில ஆமைகளை கறிக்காக வெட்டிக்கொண்டிருந்தனர். காவல்துறையினரை பார்த்ததும் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து காவல்துறையினர் சோதனை செய்தபோது, அங்கு பெருந்தலை ஆமை வகையை சேர்ந்த 3 ஆமைகளை இறைச்சிக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் ஒரு ஆமையை அந்தக் கும்பல் வெட்டி இறைச்சிக்காக விற்க வைத்திருந்ததும் தெரியவந்தது. பின்னர், ஆமைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவற்றை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வனத்துறை அலுவலர்கள் ஆமைகளை திரேஸ்புரம் மொட்ட கோபுரம் பகுதிக்கு கொண்டுசென்று கடலில் விட்டனர்.