தமிழ்நாடு

இரட்டை இலை சின்னம் வழக்கில் சசிகலா தரப்பு சீராய்வு மனுத் தாக்கல்

இரட்டை இலை சின்னம் வழக்கில் சசிகலா தரப்பு சீராய்வு மனுத் தாக்கல்

webteam

இரட்டை இலை சின்னத்தை ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். தலைமையிலான அணிக்கு வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக 2 அணிகளாக பிரிந்தது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் டிடிவி தினகரன் தரப்பில் ஒரு அணியும் உருவானது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மதுசூதனன் தலைமையிலான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிக்கு கட்சியின் சின்னத்தையும் பெயரையும் பயன்படுத்த அனுமதி வழங்கியது. இதற்கு எதிராக சசிகலா மற்றும் டிடிவி தினகரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யப்பட்டது. 

இதனிடையே கடந்த 26-ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்க கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள் இரட்டை இலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து டிடிவி தினகரன் தரப்பில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கட்சியாக பதிவு செய்தனர். இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் வழக்கில் சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.