தமிழ்நாடு

பணியில் இருந்த அரசு பேருந்து நடத்துனர் மாரடைப்பால் உயிரிழப்பு - திருச்சியில் சோகம்

பணியில் இருந்த அரசு பேருந்து நடத்துனர் மாரடைப்பால் உயிரிழப்பு - திருச்சியில் சோகம்

kaleelrahman

மாரடைப்பு ஏற்பட்டதால் அரசு பேருந்து நடத்துனர் பேருந்திலேயே மரணமடைந்தார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (45). இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது எடமலைப்பட்டிப்புதூர் பஸ் டெப்போவில் இருந்து பேருந்தை எடுத்துக் கொண்டு, மத்திய பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்றச் சென்றுள்ளார்.


அரிஸ்டோ ரவுண்டானா அருகே பேருந்து வந்த போது திடீரென ஆறுமுகத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்று ஆறுமுகத்தை சிகிச்சைக்காக அனுமதித்தார்.

ஆறுமுகத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.