வருகிற 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை திருச்சி வெங்காய மண்டி இயங்காது என வெங்காய மண்டி செயலாளர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டியில் வியாபாரிகளின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று (20.05.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் கோவிட் தொற்று இரண்டாவது அலை பரவலைத் தடுக்க தமிழக அரசுடன் ஒத்துழைக்க உள்ளதாகவும் வருகிற 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வெங்காய மண்டியை விடுமுறை விடுவதோடு, வர்த்தகம் எதுவும் நடைபெறாது எனவும் இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது .
மேலும் இதில், பணி செய்யக்கூடிய தொழிலாளர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு 300 டன் வெங்காயம், திருச்சி வெங்காயம் மண்டிக்கு வருகிறது. தினமும் ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகமும் நடைபெறுகிறது. இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல் சமூக பரவலை தடுப்பதற்காக திருச்சி வெங்காயம் மண்டியை ஒருவார காலத்திற்கு வியாபாரம் நடைபெறாமல் விடுமுறை விடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெங்காய மண்டி செயலாளர் தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.