தமிழ்நாடு

கோயம்பேட்டில் இருந்து வந்தால் தகவல் கொடுக்க வேண்டும் - திருச்சி மாவட்ட ஆட்சியர்

கோயம்பேட்டில் இருந்து வந்தால் தகவல் கொடுக்க வேண்டும் - திருச்சி மாவட்ட ஆட்சியர்

webteam

சென்னை கோயம்பேட்டில் பணிபுரிந்து யாரும் திருச்சி வந்தால் உடனடியாக தகவல் தரவேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்னையில் மட்டும் 906 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் கோயம்பேடு சந்தையில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் பணிபுரிந்து யாரும் திருச்சி வந்தால் உடனடியாக தகவல் தரவேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், “சென்னை கோயம்பேட்டில் வேலை பார்த்த தொழிலாளர்கள் மற்றும் காய்கறி வியாபாரிகள் திருச்சி மாவட்ட எல்லைக்கு வரும்போது லாரி போன்ற வாகனம் முழுவதும் சோதனைபடுத்தப்படுகிறது. லாரிகளில் மறைந்து யாரும் வந்தால் அவர்களை பிடித்து உடனடியாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. இன்று வந்த இரண்டு பேர் லால்குடியை சேர்ந்தவர்கள். அவர்களை சோதனை செய்து வீட்டில் தனிமைப்படுத்தி ஸ்டிக்கர் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.