தமிழ்நாடு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பெல் நிறுவன ஊழியர்கள் உண்ணாவிரதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பெல் நிறுவன ஊழியர்கள் உண்ணாவிரதம்

kaleelrahman

திருச்சி பெல் தொழிற்சாலை மெயின்கேட் முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் சரியான செயல் திட்டத்துடன் உற்பத்தி லாபத்தில் நிறைவு செய்திட வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நிர்வாகம், ஜாயின் கமிட்டி மீட்டிங் தேதியை உடனே அறிவிக்க வேண்டும், சரியான செயல் திட்டத்துடன் உற்பத்தியை லாபத்தில் நிறைவு செய்ய வேண்டும், தீபாவளி முடிந்து இதுவரை தீபாவளி போனஸ் வழங்கப்படாதது குறித்து முடிவெடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெல் மெயின் கேட் முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் பெல் குடியிருப்பு பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் சாலைகளை செப்பனிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பெல் ஐஎன்டியுசி தொழிற்சங்க பொதுச் செயலாளர் அந்தோணி அலெக்சிஸ் திரவியம் தலைமை வகித்தார், என்டிஎல்எப் பொதுச் செயலாளர் உத்திராபதி, பிசிஇயூ பொதுச் செயலாளர் மணிமாறன், எல்எல்எப் பொதுச் செயலாளர் லட்சுமணன், டாக்டர் அம்பேத்கார் யூனியன் பொதுச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் பெல் மெயின்கேட் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.