திருச்சியில் இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கான இசை நிகழ்ச்சி சமூக வலைதளங்கள் மூலம் நேரலையாக நடந்தது.
கொரோனா நோய் தொற்றின் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை, தமிழகத்தில் திருவிழா திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் நடைபெறும் இசைக்கச்சேரிகள் நடத்தப்படாததால் இசை நிகழ்ச்சியை நம்பி வாழ்ந்துவரும் இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருச்சி மாவட்ட மேடை இசை கலைஞர்கள் அனைவரும் பங்கு பெறும் வாழ்வாதாரத்திற்கான மாபெரும் இசை நிகழ்ச்சி எடமலைப்பட்டிபுதூர் குழந்தை இயேசு கோவில் மண்டபத்தில் நடந்தது. அது ஃபேஸ்புக், யூ டியூப் போன்ற சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் கிடைக்கும் சிறு தொகையை கொண்டு இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மீட்க உதவும் என்பதற்காக இந்த இசை நிகழ்ச்சி நடந்தது. மேலும் தமிழக அரசு இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.