தமிழ்நாடு

திருச்சி: இரண்டு இடங்களில் ஓட்டு போட்டதாக திமுக பெண் கவுன்சிலர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

திருச்சி: இரண்டு இடங்களில் ஓட்டு போட்டதாக திமுக பெண் கவுன்சிலர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

kaleelrahman
திருச்சி மாநகராட்சியில் இரண்டு இடங்களில் ஓட்டு போட்டதால் திமுக பெண் கவுன்சிலர் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அதே வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட கவிதா என்பவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி, 56வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் மஞ்சுளா தேவியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி, அதே வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட கவிதா என்பவர், திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் மஞ்சுளா தேவி இரண்டு இடங்களில் வாக்கு செலுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி பாபு, 'திமுக கவுன்சிலர் மஞ்சுளா தேவி, திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர், மாநில தேர்தல் ஆணையர் ஆகியோர், வரும் ஜூன் 10ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.