தமிழ்நாடு

திருச்சி: கண்களை கட்டிக் கொண்டு உலக சாதனை படைத்த 3ஆம் வகுப்பு மாணவி

திருச்சி: கண்களை கட்டிக் கொண்டு உலக சாதனை படைத்த 3ஆம் வகுப்பு மாணவி

kaleelrahman

கண்களை கட்டிக் கொண்டு ஒரு நிமிடத்தில் 11 ரூபாய் நோட்டுகளில் உள்ள எண்களை படித்துக் காட்டி துறையூர் மாணவியர் ரக்ஷிதா உலக சாதனை படைத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் சரவணன். தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வரும் இவருக்கு, கீதா என்ற மனைவியும் ரக்ஷிதா என்ற 7 வயது மகளும் உள்ளனர். ரக்ஷிதா துறையூரில் உள்ள விமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், ரக்ஷிதா கண்களை கட்டிக்கொண்டு ரூபாய் நோட்டுகளில் உள்ள எண்களை படித்து உலக சாதனை படைத்துள்ளார். ஒரு நிமிடத்தில் 11 ரூபாய் நோட்டுகளில் உள்ள எண்களை படித்துக் காட்டி நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் படைத்துள்ளார். ஏற்கெனவே தூத்துக்குடியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் ஒரு நிமிடத்தில் ஒன்பது ரூபாய் நோட்டுகளில் உள்ள எண்களை படித்துக் காண்பித்தது தான் இதுவரை சாதனையாக இருந்தது.

ரக்ஷிதா அந்த சாதனையை முறியடித்து ஒரு நிமிடத்தில் 11 ரூபாய் நோட்டுகளில் உள்ள எண்களை கண்ணைக் கட்டிக்கொண்டு படித்துக் காட்டி உலக சாதனை படைத்துள்ளார். நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பு சார்பாக வழங்கப்பட்ட சாதனைக்கான விருதினை, விமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி முதல்வர் மரிய செல்வி முன்னிலையில் முசிறி கல்வி அதிகாரி சண்முகம் ரக்ஷ்சிதாவிடம் வழங்கினார்.

இதுபற்றி ரக்ஷிதாவின் தாயார் கீதா கூறும்போது ரக்ஷிதாவின் திறமையை வெளிக் கொணர்வதற்காக ஸ்பைடர் மைன்ஸ் என்ற சிறப்புப் பயிற்சியை அவருக்கு வழங்கியதாகவும் அதை கற்றுக்கொண்ட ரக்ஷிதா கண்ணை கட்டிக்கொண்டு ஓவியம் வரைவது, வண்ணங்களை கண்டுபிடிப்பது, ரூபாய் நோட்டுகளில் உள்ள எண்களை சொல்வதிலும் சிறப்பாக பயிற்சி பெற்று இந்த சாதனையை புரிந்துள்ளார் எனக்கூறினார்