தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் லண்டன் பயணம்: விரைவில் தயாராகிறது பயணத்திட்டம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் லண்டன் பயணம்: விரைவில் தயாராகிறது பயணத்திட்டம்!

நிவேதா ஜெகராஜா

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொள்ளவுள்ள பயணத்திட்டம் தயாராகவுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக்வின் சொந்த நாடான இங்கிலாந்தில் அவரின் ஊரில், சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். தற்போது அச்சிலை அமைக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, அச்சிலையை திறப்பதற்கு லண்டனுக்கு வரக்கூறி முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று, முதல்வர் லண்டன் செல்ல உள்ளார்.

மட்டுமன்றி வரும் ஜூலை மாதம் அமெரிக்காவிலுள்ள வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை விழாவில் கலந்துகொள்ளவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா செல்கையில், தமிழகத்தில் முதலீடு செய்ய தயாராக இருக்கிற 50-க்கும் மேலான தமிழ் தொழிலதிபர்களை இணைத்து அவர்களை வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை விழாவில் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்புகள் யாவும் லண்டனில் மே 5 முதல் 7 வரை நடைபெற்ற தி - ரைஸ் - எழுமின் மாநாட்டில் கூறப்பட்டது. தொடர்ந்து லண்டன், அமெரிக்காவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கான பயணத்திட்டம் விரைவில் இறுதியாகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் ஐக்கிய அமீரக நாடுகளுக்குச் சென்றதை தொடர்ந்து, தற்போது அவரது அமெரிக்க பயணம் திட்டமிடப்பட்டு வருகின்றது.