தமிழ்நாடு

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

Rasus

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள் - போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் இடையே தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் தொமுச, சிஐடியு தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்டவைகளுக்காக 1,250 கோடி ரூபாயை வழங்க அரசு தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை அடுத்த 3 மாதங்களுக்குள் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவதாக தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்டன.