மே மாதம் வாங்கிய 1000 ரூபாய் மாதாந்திர பாஸ் ஜூலை 15 வரை செல்லும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிட்டத்தட்ட ஒருமாதத்திற்கு பிறகு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சென்னையில் அரசு பஸ்கள் இரவு 9.30 மணிவரை இயக்கப்படும் என்று கூறினார். மேலும், 16.05.2021 முதல் 15.06.2021 வரை பயணம் செய்யும் வகையில் 1000 ரூபாய் பாஸ் வாங்கியவர்கள் அந்த பாஸை ஜூலை 15ஆம் தேதிவரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.