சென்னை மாநகரப் பேருந்துகளில் ஆயிரம் ரூபாய் பாஸ் அப்படியே தொடரும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர பேருந்துகளில் மாதந்திர பாஸ்-ன் கட்டணம் ரூ.1000 லிருந்து ரூ.1300 ஆக உயர்த்தப்பட்டதாக நேற்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பஸ் பாஸ் கட்டணம் உயர்த்தப்படுவதாக எதிர்க்கட்சியினர் உள்ளிட்டோர் கூறிவந்த நிலையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் ஆயிரம் ரூபாய் பாஸ் அப்படியே தொடரும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 50 ரூபாய்க்கான தினசரி பஸ் பாஸ் குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார். மாதாந்திர சீசன் அட்டைக்கான கட்டணம் 240 ரூபாயில் இருந்து 320 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஆயிரம் சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பேட்டரி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.