தண்டவாளம் அருகே திடீரென ஏற்பட்ட பள்ளம் pt desk
தமிழ்நாடு

சென்னை: தண்டவாளம் அருகே திடீரென ஏற்பட்ட பள்ளம் - ரயில் சேவை பாதிப்பு... பயணிகள் அவதி...

ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாள பக்கவாட்டில் திடீர் பள்ளம் ஏறபட்டதால் 1 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு. ஊழியர்கள் பள்ளத்தை சீர்செய்ததை அடுத்து ரயில் சேவை இயல்பு நிகைக்கு திரும்பியது.

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னை ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளன. அப்போது சென்னையில் இருந்து திருவள்ளூர் நோக்கிச் செல்லும் வழியில், அண்ணனூர் - திருமுல்லைவாயல் இடையே தண்டவாளத்தின் அருகே திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவ்வழியே ரயில்கள் இயக்கம் தடைபட்டது.

தண்டவாளம் அருகே திடீரென ஏற்பட்ட பள்ளம்

இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் காலை பணிக்கு செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே பணியாளர்கள் ஜல்லிக் கற்களை கொட்டி பள்ளதை மூடி தற்காலிகமாக நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும் அவ்வழி தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுவதால் ரயில்கள் போக்குவரத்தில சிரமம் ஏற்பட்டுள்ளது.

தண்டவாளம் அருகே கால்வாய் அமைக்கும் பணி காரணமாக பள்ளம் ஏற்பட்டதா அல்லது வேறு எதேனும் காரணமா என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.