girl pt desk
தமிழ்நாடு

கொண்டாட்டத்தில் நேர்ந்த துயரம்: 4 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு – வீடுகள் எரிந்து சேதம்

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்ட போதும் சில இடங்களில் கொண்டாட்டங்கள் துயரத்தில் முடிந்துள்ளன. அத்தகைய நிகழ்வுகள் குறித்து பார்ப்போம்.

webteam

ராணிப்பேட்டையில் சோகம்...

ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்த ஓட்டுநர் ரமேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடியுள்ளார். அப்போது இவரது நான்கு வயது மகள் நவீஸ்கா, தனது பெரியப்பா விக்னேஷனுடன் இணைந்து பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் வெடி வெடித்துள்ளது. அதில் சிறுமி நவீஸ்கா பலத்த தீக்காயத்தால் அலறி துடித்துள்ளளார். அதேபோல் தினேஷக்கு கை விரல் துண்டானது.

diwali

இந்நிலையில், காயமடைந்த இருவரையும் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கை விரல் துண்டான விக்னேஷ் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வெடிவிபத்தின் போது 15க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஈரோடு வெடிவிபத்து -

ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் பாலாஜி என்பவர் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து விசாரித்த காவல்துறையினர் பாலாஜி மது போதையில் இருந்த போது சக்தி வாய்ந்த பட்டாசுகளை வெடித்திருக்கலாம் என்றும், அதனால் காயங்கள் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

Death

சென்னை சம்பவம் -

சென்னை சூளை பகுதியில் உள்ள நேரு மார்க்கெட் வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 8 கடைகள் எரிந்து சேதமடைந்தன. அருகாமை பகுதியில் வெடிக்கப்பட்ட பட்டாசில் இருந்த பொறி விழுந்து தீ பரவியதாக கூறப்படுகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இவ்விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமடைந்ததாக கூறப்படுகிறது.

புதுக்கோட்டை, கும்பகோணத்திலும் சோகம் -

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் பட்டாசு வெடித்த போது சிதறிய தீப்பொறி அதே கிராமத்தைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் என்பவரது வீட்டுக்கு கூரையில் பட்டதில் அந்த வீடு முழுமையாக எரிந்து நாசமானது.

கும்பகோணம் அருகே ராக்கெட் வகை பட்டாசு விழுந்ததில் 3 குடிசை வீடுகள் தீயில் கருகின. 7 வயது சிறுவன் வைத்த ராக்கெட்டில் ஏற்பட்ட விட்டதால் இவ்விபத்து நேரிட்டதாகவும் அருகில் பெரியவர்கள் இருந்து அறிவுரை கூறியிருந்தால் இது நேர்ந்திருக்காது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.