தமிழ்நாடு

மதுரை: கூகுள் பே மூலம் வசூலிக்கப்படும் போக்குவரத்து விதிமீறல் அபராதம்

மதுரை: கூகுள் பே மூலம் வசூலிக்கப்படும் போக்குவரத்து விதிமீறல் அபராதம்

கலிலுல்லா

மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் கூகுள் பே, ஃபோன் பே, நெட் பேங்கிங் மூலம் பெறப்படுவதால், அரசுக்கு வசூல் இருமடங்காக அதிகரித்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அபராதத்தொகை செலுத்துவதில் வாகன ஓட்டிகளுக்கு இருந்த சிரமங்களை நீக்கும் வகையில், ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி முதல் கூகுள்பே, ஃபோன் பே, பேடிஎம், நெட் பேக்கிங் போன்றவை மூலம் அபராதம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை, மதுரை மாநகர காவல் துறையில் 3லட்சத்து 19ஆயிரத்து 700ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருந்த நிலையில், இப்புதிய வசதிகள் அமலுக்கு வந்தபின், ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை, 6 லட்சத்து 600 ரூபாயாக அபராத வசூல் அதிகரித்துள்ளது.