தி.நகர் பகுதியில் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்...! புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை | தி.நகர் பகுதியில் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்...! ஏன்? என்ன மாற்றம்?

“சென்னை தியாகராய நகரில் சாலை மேம்பாலம் கட்டும் பணிக்காக இன்று காலை 10 மணிமுதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பாக, “சென்னை தியாகராய நகரில் சாலை மேம்பாலம் கட்டும் பணிக்காக இன்று காலை 10 மணிமுதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது” என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான முழு அறிவிப்பில், மேட்லி சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கவுள்ளதால் 27.4.2024 முதல் 26.4.2025 வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, வடக்கு உஸ்மான சாலையிலிருந்து உஸ்மான் சாலை மேம்பாலம் வழியாக தியாகராய நகர் பேருந்து நிலையம் செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, பேருந்துகள், மேம்பாலம் அணுகு சாலை வழியாக பிரகாசம், பாஷ்யம், பர்கிட் சாலை வழியாக தியாகராயநகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.

மற்ற வாகங்கள் மூசா தெரு, தெற்கு தண்டபாணி தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தியாகராய நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.

தியாகராய நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிஐடி நகர் 3 ஆவது பிரதான சாலை வழியாக சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடையலாம்.

சிஐடி நகர் 1 ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்கு வெங்கட் நாராயணா, நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக செல்லாம். தியகராய நகர் பேருந்து நிலையத்திலிருது வடக்கு உஸ்மான் சாலையை அடைய வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.