உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி அங்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அருள்மிகு தர்பாரண்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு தனி சன்னதியாக அமைந்துள்ள சனீஸ்வர பகவான் உலக அளவில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக உள்ளது. இந்த கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நாளை காலை 9.15 மணிக்கு நடைபெறவுள்ளது.
குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி அங்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பின் தற்போது 1 கோடி ரூபாய் மதிப்பில் சிவ ஆகம விதிகளின் அடிப்படையில் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதனையொட்டி குடமுழுக்கு நடைபெறுகிறது. குடமுழுக்கில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி , துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் பல்லாயிரக்காண மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.