tomato file
தமிழ்நாடு

தொடர் மழை காரணமாக தக்காளி விலை உயர்வு: விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை!

சண்முகசுந்தரம் தனக்கு சொந்தமான மற்றொரு தோட்டத்தில் உள்ள இடத்தில், இங்குள்ள 35 தென்னை மரங்களை பொக்லைன் மூலம் வேரோடு பிடுங்கி நடவு செய்தார்.

webteam

திருப்பூர் - தென்னை மரங்கள் பிடுங்கி வேறொரு இடத்தில் நடவு!

திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பகுதியில் வசித்து வரும் சண்முகசுந்தரம் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதியதாக வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். அப்போது அந்த இடத்தில் இருந்த சுமார் 50 தென்னை மரங்கள், காய் காய்த்து விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் சண்முகசுந்தரம் தனக்கு சொந்தமான மற்றொரு தோட்டத்தில் உள்ள இடத்தில், இங்குள்ள 35 தென்னை மரங்களை பொக்லைன் மூலம் வேரோடு பிடுங்கி நடவு செய்தார்.

Coconut tree

தனது தந்தை காலத்தில் வைக்கப்பட்ட தென்னை மரங்களை வெட்டினால் மீண்டும் இந்த மாதிரி மரம் வளர்க்க 20 வருடம் ஆகும் என்பதால் 25 மரங்களைஇடம் மாற்றம் செய்த நிலையில், அதில் 23 மரங்கள் மீண்டும் காய்க்க ஆரம்பித்துள்ளது. விவசாயி சண்முக சுந்தரம் மேற்கொண்ட இந்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

விளைச்சல் பாதிப்பு - விலை குறைவால் தக்காளி விவசாயிகள் வேதனை!

தேனி மாவட்டம் போடி, தேவாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளான இராசிங்காபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, சிலமலை, மீனாட்சிபுரம், டொம்புச்சேரி, பாலார்பட்டி, கூழையனூர், உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தக்காளி விவசாயம் நடைபெற்று வருகிறது.

Tomato

இந்நிலையில் இப்பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக தக்காளி செடிகள் அழுகி விளைச்சல் பாதிக்கப்பட்டது. விளைச்சல் குறைந்துள்ள நிலையில் 12 கிலோ கொண்ட ஒரு பெட்டியை 200 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகி வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டதாகவும், விளைச்சல் குறையவே விலை அதிகரித்து இருப்பதற்கு காரணம் என விவசாயிகள் தெரிவித்தனர். விலை அதிகரித்தாலும் போதிய விளைச்சல் இல்லாததால் தக்காளி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.