தமிழ்நாடு

சுங்கச்சாவடி மோதல்: ரூ.18 லட்சம் பணத்தை காணவில்லை என வழக்குப்பதிவு

சுங்கச்சாவடி மோதல்: ரூ.18 லட்சம் பணத்தை காணவில்லை என வழக்குப்பதிவு

Rasus

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலின்போது ரூ.18 லட்சம் பணத்தை காணவில்லை என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 12 பூத்களில் இருந்தும், அலுவலகத்தில் இருந்தும் மொத்தமாக ரூ.18 லட்சம் பணத்தை காணவில்லை என சுங்கச்சாவடி பொறுப்பாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் குடியரசு தினத்தன்று, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையிலான வாக்குவாதம் பெரும் மோதலாக மாறியது. இதில், ஓட்டுநரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதையடுத்து, அடுத்தடுத்து வந்த பேருந்து பயணிகளும், வாகன ஓட்டிகளும் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதலில் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக‌ பேருந்தின் ஓட்டு‌ர் நாராயணன், நடத்துநர் பசும்பொன் முடியரசன், சுங்கச்சாவ‌டி ஊழியர்கள்‌ குல்தீப் சிங் உள்ளிட்‌ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சுங்கச்சாவடியில் நடந்த மோதலின்போது ரூ.18 லட்சம் பணத்தை காணவில்லை என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.