இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
தமிழ்நாடு

தலைப்புச் செய்திகள்|ஹரியானாவில் 3ஆவது முறையாக ஆட்சியமைத்த பாஜக-டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த 7 பேர்!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஹரியானாவின் 3-ஆவது முறையாக ஆட்சியமைத்த பாஜக முதல் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த 7 பேர் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • ஹரியானாவில் தொடர்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியை தக்கவைத்தது பாரதிய ஜனதா கட்சி. தேர்தல் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி வெற்றிக் கனியை பறித்தது பாஜக.

  • காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி வெற்றி. பெரும்பான்மைக்கு 48 தொகுதிகள் தேவை என்ற நிலையில் 49 இடங்களை கைப்பற்றியது.

  • ஹரியானா மக்கள் உண்மை, வளர்ச்சி, நல்லாட்சிக்கு வாக்களித்துள்ளனர் என்றும், வாக்காளர்கள் பொய்களை புறந்தள்ளியிருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கருத்து.

  • ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என காங்கிரஸ் அறிவிப்பு. மேலும், மின்னணு வாக்கு இயந்திரத்தில் குளறுபடி இருந்ததாக குற்றச்சாட்டு.

  • தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பை சேர்ந்த மேலும் ஒருவர் சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • மெரினாவில் 15 லட்சம் பேர் கூடிய நிலையில் அனைவருக்கும் குடிநீர் வழங்குவது அரசுக்கு சாத்தியமில்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்.

  • தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்த நிலையில், உரிய நேரத்தில் மருத்துவரை அணுகாததே காரணம் என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

  • முதல் மாநாட்டுப் பணிகளில் மும்முரம் காட்டும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். வாகன நிறுத்துமிடம், போக்குவரத்து, பாதுகாப்பு குறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.,யுடன் பொதுச் செயலாளர் ஆலோசனை.

  • திருப்பூரில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு. இந்நிலையில், மக்கள் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் திமுக அரசு அலட்சியமாக இருப்பதாக இபிஎஸ் கண்டனம்.

  • டிஜிட்டல் ஆதாரங்களை கொண்டே 10 ஆண்டு சிறை செல்ல நேரிடும் என பொது இடங்களில் மோதிக்கொள்ளும் கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை.

  • சிஐடியு தொழிற்சங்க போராட்டத்தால் சாம்சங் ஊழியர்கள் ஊதியத்தை இழக்கும் நிலை உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி. மேலும், போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்புமாறும் வேண்டுகோள்.

  • காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வரும் 21-ஆம் தேதி வேலைநிறுத்தம். சாம்சங் போராட்டத்திற்கு ஆதரவாக வேலைநிறுத்தம் நடைபெறும் என சிஐடியூ அறிவிப்பு.

  • ஆன்லைனில் பெண் குரலில் பேசி ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது.. மேலும், பல பெண்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது அம்பலம்.

  • கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து, ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் 54 மூத்த மருத்துவர்கள் ராஜினாமா.

  • பெங்களூருவில் வாடிக்கையாளர் கேன்சல் செய்த கேக்கை சாப்பிட்ட உணவு டெலிவரி ஊழியரும், மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில், கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு.

  • காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் அறிவிக்கும் முதல்வர் வேட்பாளரை ஏற்கத் தயார் என சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு.

  • பண மோசடி வழக்கில் தெலங்கானா காங்கிரஸ் தலைவர் முகமது அசாரூதீன் அமலாக்கத்துறையில் ஆஜர்.

  • ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி. இந்நிலையில், தன் பெயரை பயன்படுத்தியே அவர் வெற்றி பெற்றதாக பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷன் குற்றச்சாட்டு.

  • டெல்லியில் 70ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது வழங்கி கவுரவிப்பு. மணிரத்னம், நித்யா மேனன் உள்ளிட்டோருக்கும் விருதுகளை வழங்கினார் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு..

  • இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஹாப்ஃபீல்டு, ஜெஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிப்பு. செயற்கை நரம்பியல் நெட்வொர்க் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக கவுரவம் எனத் தகவல்.

  • மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது வெற்றி. நியூசிலாந்து அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.