தலைப்புச் செய்திகள் முகநூல்
தமிழ்நாடு

தலைப்புச்செய்திகள்|இஸ்ரேலை வீழ்த்த அழைப்பு விடுத்த ஹிஸ்புல்லா To அமரன் படத்தின் முதல் பாடல் வெளியீடு

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இஸ்ரேலை அழிக்க அழைப்பு விடுத்த ஹிஸ்புல்லா அமைப்பு முதல் அமரன் படத்தின் முதல் பாடல் வெளியீடு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • ஹரியானா சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. 90 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 1031 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

  • தூத்துக்குடி, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ந்தது.மேலும், மதுரையில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

  • பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சிக்கு தயாரான மெரினா கடற்கரை,மேலும், காமராஜர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அறிவிப்பு.

  • பட்டியலினப் பிரிவில் மாநிலங்களின் உள் ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி. மேலும், தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

  • டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை தடுக்க திமுக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என இபிஎஸ் குற்றச்சாட்டு. இந்நிலையில், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு எங்கு உள்ளது என இபிஎஸ்ஸூக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி.

  • தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் தொழிலாளர்களை பணிக்கு திரும்ப வற்புறுத்துவதாக புகார். மேலும், தொழிலாளரின் வீட்டிற்கே சென்று உயரதிகாரிகள் அழைக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சை.

  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடகங்கப்பட்டது. இந்நிலையில், ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.

  • நவராத்திரி விழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மனின் ஊஞ்சல் உற்சவம் கோலாகமாக துவங்கியுள்ளது. இந்த, சிவபெருமான் திருவிளையாடல்களை எடுத்துரைக்கும் கொலுக்களை ஆர்வமுடன் கண்டுரசித்தனர் பக்தர்கள்.

  • கலைநிகழ்ச்சிகள், வீரர்கள் அணிவகுப்புடன் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

  • இஸ்ரேலின் தாக்குதலால் கடந்த 4 நாட்களில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர்உயிரிழந்ததாக தகவல். இந்நிலையில், ஹிஸ்புல்லா நிச்சயம் அழிக்கப்படும் என்றும் இஸ்ரேல் ராணுவம் திட்டவட்டம்.

  • இஸ்ரேலுக்கு ஜெருசலேம் எப்போதும் தலைநகராக இருக்கும் என பிரதமர் நெதன்யாகு உறுதி. இந்நிலையில், இஸ்ரேலை வீழ்த்த மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என ஈரான் உச்ச தலைவர் காமேனி அழைப்பு.

  • விஜய்யின் 'தளபதி 69' பட பூஜை வீடியோவை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம். இந்நிலையில், இன்று முதல் படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாகவும் அறிவிப்பு.

  • சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்தின் முதல் பாடலை வெளியிட்டது படக்குழு. ஜி.வி. பிரகாஷின் 700ஆவது பாடலாக உருவாகி இருக்கிறது ‘ஹே மின்னலே' பாடல்.