சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம். காவல்துறையினருக்கும் - போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு; கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு.
சிஏஏவுக்கு எதிராக போராடி கைதானவர்கள் விடுவிக்கப்பட்டாலும், ஒரு தரப்பினர் இரவு முழுவதும் தொடர்ந்து போராட்டம். அமைதி காக்குமாறு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள்.
சென்னை சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல இடங்களிலும் இஸ்லாமியர்கள் போராட்டம். காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்
மத்திய அரசின் வரி பகிர்வு வரலாறு காணாத அளவு குறைந்துவிட்டதாக பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர்செல்வம் தகவல். கல்விக்காக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய திட்டங்கள் அறிவிப்பு.
தமிழக பட்ஜெட் குறித்து ஆதரவாகவும் எதிராகவும் தலைவர்கள் கருத்து. ஒவ்வொருவர் தலை மீதும் 57 ஆயிரம் ரூபாய் கடன் சுமை இருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கை முடித்துவைத்தது உச்சநீதிமன்றம். சபாநாயகரே முடிவெடுப்பார் என நம்புவதாக தலைமை நீதிபதி அமர்வு கருத்து.
ஆவின் பால் ஒப்பந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம். புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து அறிவிப்பு.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 1.47 லட்சம் கோடி ரூபாயை செலுத்த வேண்டும். உச்சநீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து தொலைத்தொடர்புத்துறை உத்தரவு.
ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் மேலும் ஒரு இந்தியருக்கு கொரோனா பாதிப்பு. வைரஸ் தாக்கிய மூன்று இந்தியர்களின் உடல்நிலையும் சீராக இருப்பதாக தூதரகம் தகவல்.