நிமிடச் செய்திகள்  puthiya thalaimurai
தமிழ்நாடு

நிமிடச் செய்திகள் | எல்.ஐ.சி படத்துக்கு நோட்டீஸ் முதல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை வரை!

இன்றைய நிமிடச் செய்திகளானது எல்.ஐ.சி படத்துக்கு நோட்டீஸ் முதல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை வரை பலவற்றை பேசுகிறது.

PT WEB

இன்றைய தலைப்புச் செய்திகள் -

உலக முதலீட்டாளர் மாநாடு காலை 10 மணியளவில் தொடங்கியது

வருகிற 9ஆம் தேதி பணிக்கு வரவில்லை என்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு.

GSTR படிவத்தை தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிப்பு

திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு இன்று முதல் அனைத்து ரயில்களும் வழக்கம்போல் துவங்குகிறது

மூல வைகையாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு; ஆபத்தை உணராமல் ஆற்றை கடக்கும் விவசாயிகள்

டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

மார்ச் 9-ல் டான்செட், மார்ச் 10-ல் சீட்டா நுழைவுத்தேர்வு என அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு

பொங்கல் பரிசுத்தொகுப்பு, கரும்பு கொள்முதல் செய்திட மாவட்டம்தோறும் ஆட்சியர் தலைமையில் கண்காணிக்க குழு அமைப்பு; புகார்கள் உள்ள மக்கள் அதை தெரிவிக்க எண்கள் அறிவிப்பு (1967 - 1800 - 425 - 5901)

பாஜக தலைமையிலான கூட்டணி குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அறிவிப்பு

வனத்துறையை கண்டித்து ஜீப் ஓட்டுநர்கள் நீலகிரியில் போராட்டம்

பிரதீப் ரங்கனாதன், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகும் எல்.ஐ.சி திரைப்படத்துக்கு, எல்.ஐ.சி சார்பில் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது

- இப்படியான பல விஷயங்களை அலசுகிறது நிமிடச் செய்திகள் தொகுப்பு. செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அனைத்தையும் விரிவாக காணலாம்.