தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறும்.
நேரம்:
சொட்டு மருந்து வழங்கும் மையங்கள். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் .
வயது:
5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
பிறந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். ஆகவே, போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்கள், மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், இதுவரை போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.