இன்றைய காலை தலைப்புச் செய்திகள் முகநூல்
தமிழ்நாடு

காலை தலைப்புச் செய்திகள் | IAS அதிகாரிகள் பணியிட மாற்றம் முதல் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் முதல் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, தமிழக உள்துறைச் செயலாளர் அமுதா இடமாற்றம் செய்யப்பட்டு தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • காவிரிநீரை தரமறுக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், டெல்டா விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டுவோம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை.

  • கர்நாடக அரசை கண்டித்து டெல்டா விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு, காவிரி நீரை முறையாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

காவிரி
  • மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒப்புதல் தர வேண்டும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் வலியுறுத்தல்.

  • நில மோசடி வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, கரூர் அழைத்து வரப்பட்டு 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  • சசிகலாவை அதிமுகவில் இணைக்கவேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய ஜோசப் வீட்டில் அமலாக்கத்துறையினரின் சோதனை நிறைவு பெற்றது.

  • மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்து தகராறில் கொலை நடந்தது விசாரணையில் அம்பலமாகிறது.

  • மும்பையில் முறைகேடு புகாரில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஐஏஎஸ் பயிற்சி அகாடமிக்கு அவரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.