தலைப்புச் செய்திகள் கோப்புப்படம்
தமிழ்நாடு

Headlines: வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி முதல் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி முதல் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.

PT WEB
  • சென்னை மற்றும் புறநகரில் இரவு முதல் விட்டு விட்டு கனமழை. காலை பத்து மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. இதை கருத்தில் கொண்டு, சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இதனால் 15ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

  • ஸ்டெர்லைட் ஆலையை குறித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • கங்குவா திரைப்படத்தை வெளியிடுவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. 20 கோடி ரூபாயை சொத்தட்சியரிடம் செலுத்தாமல் வெளியிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கங்குவா
  • மணிப்பூரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், 11 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். காவல்நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய போது மோதல் ஏற்பட்டுள்ளது.

  • ஜார்கண்ட்டில் முதல்கட்டத் தேர்தல் நடக்கும் 43 தொகுதிகளில் பரப்புரை நிறைவு பெற்றது. பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமித்ஷா, யோகி ஆதித்யநாத் வாக்கு சேகரித்துள்ளனர்.

  • இடைத்தேர்தல் நடைபெறும் வயநாடு மக்களவைத் தொகுதியில் பரப்புரை ஓய்ந்தது. பரப்புரை இறுதிநாளில் சகோதரி பிரியங்காவுக்காக வாக்கு சேகரித்தார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி.

  • காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் பரஸ்பரம் குற்றச்சாட்டு. தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டதாக ஒருவர் மீது ஒருவர் புகார்.

  • ரஷ்ய அதிபர் புடினை, டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் அழைத்து பேசவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க கற்பனை கதை என ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திட்டவட்டமாக இதை தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின்
  • லெபனானுடன் போர் நிறுத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியோன் சார் பேட்டி அளித்துள்ளார்.

  • சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரில் மாஸ்டர்ஸ் பிரிவில் பட்டம் வென்றார் தமிழ்நாட்டு வீரர் அரவிந்த் சிதம்பரம். சேலஞ்சர் பிரிவில் பிரணவ் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

  • சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் வென்ற அரவிந்த் சிதம்பரம், பிரணவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து. எதிர்கலத்திற்கான மகத்தன நம்பிக்கையை காட்டுவதாக எக்ஸ் தளத்தில் பதிவு.

  • தங்களது சுயநலத்திற்காக சிலர் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக, பிரதமர் மோடி கூறியுள்ளார்.

  • தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  • இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டதாக தொடரப்பட்ட வழகில் சரவணக்குமார் என்ற அப்துல்லாவிற்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

  • பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.