Headlines pt desk
தமிழ்நாடு

தலைப்புச் செய்திகள்: திருச்சியில் பத்திரமாக தரையிறங்கிய விமானம் முதல் கவரைப்பேட்டை ரயில் விபத்து வரை

திருவள்ளூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது முதல் திருச்சி விமான நிலையத்தில் பல சிக்கல்களுக்கு இடையே பத்திரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் வரை பல முக்கிய செய்திகளை பார்க்கலாம்...

PT WEB

# திருவள்ளூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது
பயணிகள் ரயில் மோதி பயங்கர தீ விபத்து... விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், அலறல் சத்தம் கேட்டு பயணிகளை மீட்ட அக்கம் பக்கத்தினர்.

# ரயில் விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படாத நிலையில் காயமடைந்த பயணிகளுக்கு உடனடி சிகிச்சை...
ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்.

Rail accident

# பொன்னேரி-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ரயில் விபத்து
ஏற்பட்டதன் எதிரொலி... சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி, அரக்கோணத்திற்கு இயக்கப்படும் ரயில்கள் உட்பட 18 ரயில் சேவை முழுமையாக ரத்து.

# திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்... தொழில்நுட்பக் கோளாறால் 2 மணி
நேரத்துக்கு பிறகு சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கிய
விமானிகள்.

# திருச்சியில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு. அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி உரிய உத்தரவுகளை வழங்கியதாக சமூக வலைதளத்தில் பதிவு.

# மீண்டும் வேறொரு விமானத்தில் சார்ஜாவுக்கு செல்லாமல் பயணத்தை ரத்து செய்து வீடு திரும்பிய 36 பயணிகள். திருச்சி விமான நிலையத்திற்கு வெளியே பயணிகளை ஆரத்தழுவி
அன்பை வெளிப்படுத்திய உறவினர்கள்.

பாதுகாப்பாக 144 பயணிகளை காப்பாற்றிய விமானிகள்

# ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் ஜோகோவிச் அசத்தல். 9ஆவது முறையாக அரையிறுதி
சுற்றுக்கு தகுதி.

# போர்க்களங்களில் இருந்து எந்த பிரச்னைக்கும் தீர்வு காணப்பட
முடியாது என 19 ஆவது கிழக்காசிய உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.

# மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும்
நவராத்திரி திருவிழாவின் 9ஆம் நாள் விழாவில் மீனாட்சி அம்மன் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பலித்தார்.

# தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் மூலம் ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.