காற்றழுத்த தாழ்வுப் பகுதி புதிய தலைமுறை
தமிழ்நாடு

நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை

PT WEB

வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது.

இது வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கடல் பகுதியில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு மேலும் மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.