தமிழ்நாடு

போகி: பழையன கழித்து, புதியன புகுதலும்

போகி: பழையன கழித்து, புதியன புகுதலும்

webteam

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் பழையன கழித்து, புதியன புகுதலாக கருதப்படுகிறது. அதாவது பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல, மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி அழகுப்படுத்துவார்கள். சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, புதுச்சேரியில் அதிகாலையிலேயே மக்கள் எழுந்து வீடுகளை சுத்தம் செய்ய தொடங்கினர். கடும் குளிரிலும் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எடுத்து வந்து வீட்டின் வாசல் முன்பு தீயிட்டு மக்கள் எரித்தனர். தை முதல் நாளான நாளை பொங்கல் திருவிழாவும், அதற்கு மறுநாள் மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. 16ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படும்.