தமிழ்நாடு

போகிப் பண்டிகை முதல் முஷாரஃப் தூக்கு தண்டனை ரத்து வரை

போகிப் பண்டிகை முதல் முஷாரஃப் தூக்கு தண்டனை ரத்து வரை

webteam

தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை உற்சாக கொண்டாட்டம். பழையப் பொருட்களை தீயிட்டு, புதிய சிந்தனைகளுக்கு வித்திட்ட மக்கள்.

பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து அரசுப் பேருந்துகளில் இதுவரை 5லட்சத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊர் பயணம். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க ஏற்பாடு.

தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான கால அவகாசம் வரும் 21ஆம் தேதிவரை நீட்டிப்பு. தமிழக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சுற்றறிக்கை வெளியீடு.

இளைஞர்களின் கு‌ரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தல். இளைஞர்களுடன் விவாதம் நடத்த பிரதமர் மோடி தயாரா? என சவால்.

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய ‌கூட்டத்தில் கூட்டணி கட்சியான திமுக கலந்து கொள்ளவில்லை. இது பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டுள்ளதாக தகவல்.

கட்டண சேனலின் அதிகபட்ச தொகை 19 ரூபாயில் இருந்து 12 ரூபாயாக குறைப்பு. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அதிரடி நடவடிக்கை.

தமிழகத்தில் 6,608 கோடி ரூபாய் மதிப்புள்ள15 தொழில் திட்டங்களுக்கு அனுமதி. சுமார் 7 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என தமிழக அரசு தகவல்.

புத்தாண்டில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை விளையாடும் இந்திய அணி. மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை.

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்புக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை லாகூர் நீதிமன்றம் ரத்து. இந்தத் தூக்கு தண்டனை அரசியலமைப்புக்கு விரோதமானது எனக்கூறி நீதிபதிகள் கருத்து.