தமிழ்நாடு

நடிகர் சங்க வழக்குகளில் தீர்ப்பு முதல் இங்கிலாந்தில் நிறைவேறிய பிரெக்சிட் மசோதா வரை..! #TopNews

Rasus

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்துக்கான அரசாணை வெளியீடு. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படுகிறது.

சவுதியில் வேலை பார்க்கும் கேரள நர்ஸ்-க்கு கொரனோ வைரஸ் பாதிப்பு எனத் தகவல். தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்.

நடிகர் சங்கம் தொடர்பான அனைத்து வழக்குகளில் இன்று தீர்ப்பு. வாக்கு எண்ணிக்கை தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

சிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட கொடூரம். கைது செய்யப்பட்ட அசாம் இளைஞரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு.

காவல்துறை உதவி ஆய்வாளர் வில்சனை கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கேரளாவில் கண்டெடுப்பு. சென்னை பெரியமேட்டில் வாங்கப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சோதனை.

தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் தீவிரம். தமிழில் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என கோரிக்கை வலுக்கும் நிலையில் சமஸ்கிருதத்தில் யாகம்.

5-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு. சிறப்பு குழந்தைகளுக்கு சலுகை அளிப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரெக்சிட் மசோதா. ஐரோப்பிய ‌ஒன்றியத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுகிறது பிரிட்டன்.

நியூசிலாந்தின் சவாலை எதிர்கொள்ளும் இந்திய அணி. ஆக்லாந்தில் இன்று முதல் ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட் போட்டி.