தமிழ்நாடு

பொங்கல் திருநாள் உற்சாக கொண்டாட்டம் முதல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரை..! #TopNews

பொங்கல் திருநாள் உற்சாக கொண்டாட்டம் முதல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரை..! #TopNews

webteam

தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகம். வீடுகள் முன் அலங்காரத் தோரணங்களைக் கட்டி, வண்ண நிறங்களில் கோலமிட்டு மக்கள் வரவேற்பு.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து. அனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும், செழிப்பையும் அள்ளித்தரட்டும் என ஆளுநர் வாழ்த்து.

சமுதாயம் கெட்டுக் கிடப்பதாக, துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு. பாலையும் தண்ணீரையும் போல், உண்மையையும், பொய்யையும் பிரித்தறிய அறிவுரை.

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. தெற்கு கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மனுத் தாக்கல்.

இசைஞானி இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது. கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையுடன் ஹரிவராசனம் விருதை கேரள அரசு வழங்கி வருகிறது.

அடுத்த மாதம் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். பயணம் திட்டம் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் விரைவில் ஆலோசனை.

பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மூலம் மட்டும் அரசுக்கு‌ 10கோடியே 80லட்சம் ரூபாய் வருவாய். கடந்த 10-ஆம் தேதி முதல் நேற்று இரவு 10 மணி வரை 15 ஆயிரத்து 825 பேருந்துகள் இயக்கப்பட்டு, சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளதாக தகவல்.

சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம். தை மாதம் முதல் நாளில் சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று மாலை பொன்னம்பலமேட்டில் ஒளிரும் மகரஜோதியை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல். வரு‌கிற 20-ஆம் தேதி முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு.

இந்திய அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி. ஆட்டநாயகனாக வார்னர் தேர்வு.